திருவண்ணாமலை: கோயில் குளத்தில் குளித்த இளைஞர் பரிதாப பலி

353பார்த்தது
திருவண்ணாமலை: கோயில் குளத்தில் குளித்த இளைஞர் பரிதாப பலி
வெம்பாக்கம் அழிவிடைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (28) கோயில் திருவிழாவிற்காக வந்திருந்தபோது, நண்பருடன் சனிக்கிழமை பந்தியம்மன் கோயில் அருகேயுள்ள குளத்தில் குளித்துள்ளார். அப்போது, குளத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் காலில் சுற்றியதால் சேற்றில் சிக்கி விஜய் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் விஜய்யின் உடலை மீட்டனர். பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி