திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (31) என்பவர் குழந்தை இல்லாததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து, கடந்த 28-ஆம் தேதி வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை பெற்றோர் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.