திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் உதயகுமார், நேற்று (பிப்ரவரி 10) தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாலையை மறித்து கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.