திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துச் சென்ற பெண்களிடம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது; மேலும் மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கடந்த 30, 31 ஆகிய இரண்டு தினங்களில் கிரிவலம் முடித்துச் சென்ற இரண்டு பெண்களை மர்ம நபர்கள் காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு தங்க நகைகளையும் பறித்துச் சென்றிருந்தனர்.