செய்யாறு: அரசு பள்ளியில் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு

70பார்த்தது
செய்யாறு: அரசு பள்ளியில் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு
செய்யாறு அருகே சோதியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிற்றுண்டி மைய அறையின் பூட்டை உடைத்து இரண்டு எரிவாயு உருளைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி திறப்பை முன்னிட்டு அறையை சுத்தம் செய்ய சென்ற பொறுப்பாளர் உஷா, திருட்டை கண்டறிந்தார். கடந்த மார்ச் மாதம் பூட்டிவைக்கப்பட்ட அறையில் இந்த திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வெம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி