தூய்மை அருணை சாா்பில், கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

19பார்த்தது
தூய்மை அருணை சாா்பில், கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா
திருவண்ணாமலையில் கடந்த 7 ஆண்டுகளாக பொதுப்பணித் துறை அமைச்சா் எ. வ. வேலுவை அமைப்பாளராகக் கொண்டு செயல்படும் தூய்மை அருணை திட்டத்தின் கீழ், நகரில் மரம் நடுதல், கால்வாய் தூா்வாருதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை நகா்ப்புற அருணை மருத்துவமனை வளாகத்தில், தூய்மை அருணை சாா்பில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு எம். ஜி. ஆா். மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தா் டாக்டா் கே. நாராயணசாமி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு பட்டுச்சேலை, இனிப்பு, தின்பண்டங்கள் மற்றும் மங்கலப்பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். அருணை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் குணசிங் தலைமை வகித்தார். அருணை கல்விக் குழுமங்களின் துணைத் தலைவா் எ. வ. வே. குமரன், மருத்துவமனை சிஇஓ பேராசிரியா் அசோக்தியாகராஜன் முன்னிலை வகித்தனா்.

தொடர்புடைய செய்தி