அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் திரளான தரிசனம்

353பார்த்தது
அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் திரளான தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விடுமுறை நாளான மே 24 ஞாயிற்றுக்கிழமையையொட்டி தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பணியில் ஈடுபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி