திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைவதை கண்காணிக்கவும், பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுன் திருவண்ணாமலை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று போன்ற அவசரகாலங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.