திருவண்ணாமலை அதிமுக வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

55பார்த்தது
திருவண்ணாமலை அதிமுக வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் விளை, கல்லேரிப்பட்டு, கல்பூண்டி, மொழுகம்பூண்டி, லாடப்பாடி ஆகிய கிராமங்களில் வாக்குச்சாவடி குழு பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில், அதிமுக தெற்கு ஒன்றியச் செயலர் ஜி. வி. கஜேந்திரன் தலைமை வகித்தார். இலக்கிய அணி மாவட்டச் செயலர் ஜெகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வரகூர் அருணாச்சலம், மத்திய மாவட்டச் செயலர் எல். ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி குழுவில் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலர் வனிதா சதீஷ், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலர் உசேன்ஷெரீப், முன்னாள் தலைவர்கள் ஹேமாவதி வாசுதேவன், அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், விளை கிராமத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி