மண்டகொளத்தூா் ஊராட்சியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்.

0பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் ஊராட்சியில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டனா். ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல். ஜெயசுதா, அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியின் திட்டங்கள் குறித்தும், திமுக அரசின் அவலநிலை குறித்தும் திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு துண்டு பிரசுரங்களை வீடுதோறும் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பி. ராகவன், எல். விமல்ராஜ், மாவட்ட விவசாய அணிச் செயலா் செல்வன், ஒன்றிய துணைச் செயலா் ஜெயகாந்திகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி