திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பாஜக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெசவாளர் அணி மாவட்ட தலைவர் கே. பி பாலச்சந்தர் தலைமை தாங்கிய இந்த நிகழ்வில், மாநில தலைவர் என். அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்கள், குறிப்பாக நெசவாளர்களுக்கான உதவிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும், கிராம பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.