செங்கம்: முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

72பார்த்தது
செங்கம்: முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நடைபெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்குள்பட்ட புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இறையூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றியச் செயலர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் பொன்னிசுந்தரபாண்டியன், கிழக்கு ஒன்றியச் செயலர் ஆறுமுகம், புதுப்பாளையம் நகரச் செயலர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன், திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் நெல்லிக்குப்பம் புகழேந்தி, அண்ணவயல் கணேசன் ஆகியோர் பேசினர். நிகழ்வில், பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலஉதவிகள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றிய அவைத் தலைவர் பாரதிதாசன், துணைச் செயலர்கள் கற்பகசுந்தரம், ஜெயராஜ், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பிரகலநாதன் வரவேற்றார். நிறைவில், முகமது நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி