தி. மலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம்

168பார்த்தது
தி. மலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு அன்னாபிஷேகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரா் சந்நிதியில் 50 கிலோ அரிசி மற்றும் பல்வேறு வகையான காய், கனிகளை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநோ் அண்ணாமலையாா் கோயிலிலும் 100 கிலோ வெள்ளை சாதத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி