வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வந்தவாசி மேற்கு ஒன்றிய விசிக செயற்குழுக் கூட்டத்தில், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவது குறித்தும், வந்தவாசி பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியச் செயலா் இரா.பிரபு தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில், ஆரணி மண்டலச் செயலா் செ.நன்மாறன், மாவட்டச் செயலா் ம.கு.மேத்தாரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.