திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட அமர்வு நீதிபதி திரு. மதுசூதனன் அவர்கள் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி சல்மா, ஏராளமான வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தின் பொருளாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.