திருவண்ணாமலையில் இன்று (21. 05. 2026) இரவு 8 மணி முதல் 8. 30 மணி வரை பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை முதல் கடும் வெப்பம் நிலவிய நிலையில் திடீரென பெய்த மழையால் நகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும்,
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இருப்பினும் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.