போளூரில்: தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டத்தின் தொடக்க விழா

1பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. போளூர் நகராட்சியில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு இட்லி, பொங்கல், வடை உள்ளிட்ட காலை உணவை நகராட்சி தலைவர் ராணி சண்முகம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கோபு, தூய்மை ஆய்வாளர் ஹேமலதா மற்றும் பிற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி