சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தவறவிட்ட நகை மீட்பு

315பார்த்தது
சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தவறவிட்ட நகை மீட்பு
விழுப்புரத்தைச் சேர்ந்த முருகன் (56) என்பவர், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தபோது தனது 4 சவரன் தங்க நகையைத் தவறவிட்டார். இது குறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கோட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் மருத்துவமனையில் கிடந்த நகையைக் கண்டெடுத்து, அதை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நகையை உரியவரிடம் ஒப்படைத்தனர். நேர்மையாகச் செயல்பட்ட குணசீலனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி