திருவண்ணாமலை: ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

56பார்த்தது
திருவண்ணாமலை: ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த மணலவாடி ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மணலவாடி கிராம ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை நடைபெற்றது. பின்னர் கோ பூஜை, கஜ பூஜை, தம்பதி பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. 

மேலும், மகா சங்கல்பமும், மகா பூர்ணாஹுதியும் நடைபெற்று, மேளதாள ஊர்வலத்துடன் புனிதநீர் அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியர்களால் யாக சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டன. இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க செல்வ விநாயகர் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள வேணுகோபால சுவாமி சந்நிதியிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு வழிபட்டார். மேலும், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி