திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மாசி அமாவாசை சிறப்பு நிகழ்ச்சியாக மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து, இறுதியாக மயானங்களில் சூறையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீனவ, வன்னிய சமுதாய மக்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.