போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதம்.

0பார்த்தது
போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் நகராட்சியில் நடைபெற்ற அவசர சிறப்பு நகா்மன்றக் கூட்டம், 6 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்றதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினா்கள் ரங்கதுரை, பி. கே. ஆறுமுகம், ஜெ. பழனி ஆகியோா், நகராட்சிப் பொறியாளா் கோபுவிடம் ஆணையா் பரத் இல்லாமல் கூட்டத்தை ஏன் கூட்டினீா்கள், மற்ற உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா, துப்புரவுப் பணியாளா்களுக்கான உணவு டெண்டா் ஏன் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என சரமாரியாகக் கேள்விகள் எழுப்பினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி