போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் வெங்கடேஷ் - ஆதிலட்சுமி தம்பதியினரின் மகன் ஜெகதீஷ் (9) பள்ளி முடிந்து செய்யாற்றில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குடிநீர்த் தேவைக்காக அமைக்கப்பட்ட திறந்த வெளிக்கிணற்றின் தடுப்புச் சுவரில் இருந்த இரும்பு வலையில் ஏறி விளையாடியுள்ளார். அப்போது கம்பி அறுந்து ஜெகதீஷ் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். கலசப்பாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.