போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பு

78பார்த்தது
போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த சுதா திருவண்ணாமலை அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியிடம் மாறுதலில் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிலையில் அவருக்கு பதிலாக போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக அதே பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த குமுதா பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட குமுதாவிற்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி