சட்டவிரோத பேனர்களால் பொதுமக்கள் அச்சம்

302பார்த்தது
சட்டவிரோத பேனர்களால் பொதுமக்கள் அச்சம்
சேத்துப்பட்டு, போளூர், தேவிகாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆளுங்கட்சியினர் மற்றும் வணிக நிறுவனங்கள் அனுமதியின்றி பெருமளவில் பேனர்களை வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முக்கிய சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், கோயில்கள் அருகே வைக்கப்பட்டுள்ள பேனர்களால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரசியல் அழுத்தத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய முதல்வர் விஜய் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி