திருவண்ணாமலை கோழிப்புலியூா் நடுநிலைப் பள்ளியில் மறுசுழற்சி தின விழா

76பார்த்தது
திருவண்ணாமலை கோழிப்புலியூா் நடுநிலைப் பள்ளியில் மறுசுழற்சி தின விழா
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மறுசுழற்சி தின விழாவில் மாணவர்களின் கண்காட்சி இடம்பெற்றது. கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மறுசுழற்சி தினம் கொண்டாடப்பட்டது. இதில், பள்ளித் தலைமையாசிரியர் தமிழரசி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், பட்டதாரி ஆசிரியருமான முரளி வரவேற்றார். 

அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள், அலுமினியம், பேப்பர், தகரம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டவற்றை தேவையில்லை என குப்பைகளில் வீசப்படும் பொருள்களால் பூமி சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், அவற்றை மறுசுழற்சி மூலம் வீட்டிலும், பள்ளியிலும், பயன்படுத்தக்கூடிய அழகிய பொருள்களாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மாணவர்களின் அறிவுத்திறன் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பெரணமல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆறுமுகம் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அப்போது அவர் மாணவர்களை வாழ்த்திப் பேசி, பரிசுகளை வழங்கினார். கண்காட்சியை பெற்றோர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி