திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் 18 வார்டுகளை உள்ளடக்கிய நகர் பகுதியாகும். இப்பகுதியில் இன்று (மார்ச் 12) காலை 9.30 மணியளவிலும், பிற்பகல் 3.30 மணியளவிலும் விட்டுவிட்டு மின்நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் பகதூர் தெரு, கோட்டைமேடு பகுதி, சனிக்கிழமை வாடி ரோடு, ரோஷன் நகர், தாமரைக்குளம், மாட்டுப்பட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்களும் குழந்தைகளும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.