திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கமண்டல நாக நதியில் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 11 வயது சிறுவன் சுனில்ராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தான். நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் தேடியும் கிடைக்காத நிலையில், திங்கள்கிழமை காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. ஆரணி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.