தி.மலை: சாலை விபத்தில்.. தொழிலாளி பலி

0பார்த்தது
தி.மலை: சாலை விபத்தில்.. தொழிலாளி பலி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சனிக்கிழமை அன்று சங்கரன் (55) என்ற ஒப்பந்தத் தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தாா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று, நிலைதடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சங்கரனின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி