திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள மொரட்டதாங்கள் ஏரியில் ரூ. 3 லட்சத்து 65ஆயிரத்தில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை சாலை அருகே சுமார் 3.63 ஹெக்டர் பரப்பளவில் மொரட்டதாங்கள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை எம்ஐ திட்டத்தில் ஒன்றிய பொது நிதியில் ரூ. 3 லட்சத்து 65ஆயிரத்தில் தூர்வாரும் பணி தொடங்கிவைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி. எம். டி. வெங்கிடேசன், மேற்கு ஆரணி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சீனுவாசன், ஒப்பந்ததாரர்கள் பழனிவேல், ஆர். ஐ. முருகன், ஊராட்சி செயலர் எஸ். கே. சங்கர் ஆகியோர் பணியை மேற்பார்வையிட்டனர்.