தி.மலை: 22 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள்

58பார்த்தது
தி.மலை: 22 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்கள் 22 பேருக்கு, ஓய்வூதியப் பலன்களாக ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நகராட்சியில் 2022ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளா்கள் 22 பேருக்கு, ஓய்வூதியப் பலன்கள் மாநில நிதியாக ரூ.75 லட்சமும், நகராட்சி நிதியில் இருந்து ரூ.28 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 3 ரூபாய் லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிதியை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவர் ஏ.சி.மணி ஓய்வுபெற்ற பணியாளா்களிடம் வழங்கினாா். நகராட்சி ஆணையா் (பொ) சரவணன், நகராட்சி மேலாளா் எம். பாலசுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி