
தி.மலை: விடிய விடிய கிரிவலம்; பக்தர்கள் வெள்ளம்
ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டனர். கிரிவலப் பாதையில் அன்னதானம், குடிநீர், மருத்துவம், கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
















