திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மே 29 அன்று திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, நீதிபதி ரமேஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் கடந்த 05.04.2026 அன்று நடந்தது.