41-ஆவது மாநில அளவில் பாரதியாா் தின குழு விளையாட்டு போட்டிகள்

0பார்த்தது
41-ஆவது மாநில அளவில் பாரதியாா் தின குழு விளையாட்டு போட்டிகள்
திருவண்ணாமலையில் நவம்பர் 20 முதல் 25 வரை நடைபெறும் 41-ஆவது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளில் 10,640 பேர் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற அரசு செயலாற்றி வருவதாகத் தெரிவித்தார். போட்டிகளில் முதல் மூன்று நாட்கள் மாணவிகளும், அடுத்த மூன்று நாட்கள் மாணவர்களும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் க. தா்ப்பகராஜ், எம்.பி. சி. என். அண்ணாதுரை மற்றும் எம்எல்ஏக்கள் மு. பெ. கிரி, பெ. சு. தி. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப் பணித் துறை அமைச்சர் எ. வ. வேலுவும் கலந்துகொண்டு பேசினார்.

டேக்ஸ் :