திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு அனுமதி வழங்கப்பட்ட எல்லைக்கு அப்பால் கனிமங்கள் வெட்டியெடுத்ததாக கண்டறியப்பட்ட 8 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், குவாரி குத்தகை வழங்கப்பட்ட பகுதிக்கு வெளியே உரிய அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.