குண்டும், குழியுமான மயானப் பாதை: சீரமைக்கக் கோரிக்கை.

0பார்த்தது
குண்டும், குழியுமான மயானப் பாதை: சீரமைக்கக் கோரிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கல்பூண்டி காலனி பகுதியில் உள்ள மயானப் பாதை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருப்பதால், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சமீபத்திய மழையால் பாதை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறந்த எம். ஞானம்மாள் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்பட்டதால், மக்கள் சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி