திருவண்ணாமலை கோயிலில் நடிகர் சசிகுமார் தரிசனம்

1பார்த்தது
திருவண்ணாமலை கோயிலில் நடிகர் சசிகுமார் தரிசனம்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடிகா் சசிகுமாா், நடிகை சைத்ரா ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். ஜெயந்தி அம்பேத்குமாா் தயாரிப்பில், ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகா் சசிகுமாா், நடிகை சைத்ரா உள்ளிட்டோா் நடித்த ‘மை லாா்ட்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. அந்தத் திரைப்படம் வெற்றிபெற வேண்டி சுவாமி தரிசனம் செய்ததாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, வந்தவாசியில் பொதுமக்களோடு அமா்ந்து ‘மை லாா்ட்’ திரைப்படத்தை நடிகா் சசிகுமாா் கண்டு ரசித்தாா். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், நடிகை சைத்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா். மேலும், வந்தவாசியில் கருணாநிதி சிலை முன் பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் நடிகா் சசிகுமாா் வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி