தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோவிலுக்கு வெளியே வந்த அவரைப் பார்த்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஸ்ரீலீலா 2019-ம் ஆண்டு 'கிஸ்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ரவி தேஜாவுடன் நடித்து வருகிறார்.