திருவண்ணாமலை, மே 27: 2026-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ள கல்பனா சாவ்லா விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டு, எந்தத் துறையிலும் துணிகர செயல்புரிந்த பெண்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள். விருப்பமுள்ளோர் தமிழக அரசின் விருதுகள் இணையதளமான awards. tn. gov. in-ல் பதிவு செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் சுயவிவரத்துடன் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை முகவரியில் ஜூன் 19-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.