திருவண்ணாமலை: கல்லூரி மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகள்

79பார்த்தது
திருவண்ணாமலை: கல்லூரி மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 91 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் டர்போ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (டிவிஎஸ் குழுமம்) நிறுவனம் வளாக நேர்காணலை நடத்தியது. இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தப்பட்டதில் 91 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்லூரிச் செயலர் ஏ. சி. ரவி, இணைப் பதிவாளர் பெருவழுதி, சிறப்பு அலுவலர்கள் பி. ஸ்டாலின், கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் வி. கந்தசாமி முன்னிலை வகித்தார். நிறுவன மனித வள மேலாளர்கள் எஸ். ராகவன், எஸ். ஜெய்சங்கர், வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார், துணை முதல்வர் எஸ். நந்தகுமார், துறைத் தலைவர்கள், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜா, பிரகாஷ், சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி