தி.மலை: அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக அமைச்சர் ஆய்வு

156பார்த்தது
தி.மலை: அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்களின் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் எ. வ. வேலு ஆய்வு செய்தார். ராஜகோபுரம் எதிரில் கட்டணமில்லா தரிசனம், வரிசைகள் அமைத்தல், கிரிவலப்பாதை, அருங்காட்சியகம் அமையவுள்ள இடங்கள் குறித்தும் அவர் பார்வையிட்டார். வெளி மாநில, வெளிநாட்டு பக்தர்களும், வார விடுமுறை, பௌர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருவதால், எளிதாக தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி