திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட செ. நாச்சிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராமப்புற பெண்களுக்கு சுய உதவிக் குழு கடன்கள், விவசாய கடன்கள், தனிநபர் கடன், தங்க நகை கடன் போன்றவற்றை வழங்கி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் வங்கி உறுப்பினர்களுக்கு லாப ஈவுத்தொகையை வழங்குவதில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, திருவண்ணாமலையில் நடைபெற்ற 72-வது கூட்டுறவு வார விழாவில், தொடர்ந்து 24 ஆண்டுகளாக சிறந்த வங்கிக்கான விருதை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தியிடம் வழங்கினாா்.