ஆரணி: போலீசில் சிக்கிய பைக் திருடர்கள்

57பார்த்தது
ஆரணி: போலீசில் சிக்கிய பைக் திருடர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டிஸ்வரி உத்தரவின் பேரில் ஆரணி தாலுக்கா ஆய்வாளர் (பொறுப்பு) கார்த்திகா தலைமையில் தனிப்படை போலீசார் சென்னை ஆரணி சாலை இரும்புவேடு கூட்டுரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

மேலும் அப்போது பதிவுஎண் இல்லாத பைக்கில் வந்த 2 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு முரணாக பதிலளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்களின் பாணியில் விசாரணை மேற்கொண்டதில் பைக் திருட்டில் ஈடுபட்டது ஒப்புக் கொண்டனர். 

விசாரணையில் ஆரணி அடுத்த பார்வதி அகரம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் அண்ணாமலை (21) மற்றும் நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (27) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி