வந்தவாசி தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு

398பார்த்தது
வந்தவாசி தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் உதயகுமார், ஆரன் அடித்தபடி ஊர்வலம் சென்றார். உதயகுமார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அனுமதியின்றி ஊர்வலம் சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், உதயகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாலை அணிவிக்க பயன்படுத்தப்பட்ட கிரேனை பறிமுதல் செய்தனர்.