திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்தத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதல்வரின் முகவரிக்கு புகார் வந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் செல்வ பாலாஜி, வருவாய் ஆய்வாளர்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆய்வில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால், குத்தகைதாரரின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.