தி. மலை: புதிய திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

78பார்த்தது
தி. மலை: புதிய திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் மற்றும் புதிய திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் எ.வ. வேலுவின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு பேசியதாவது: திருவண்ணாமலை நகருக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகின்ற காரணத்தால் திருக்கோவில் வளாகம், மாடவீதி மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் சேகரம் செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். குப்பைகள் முறையாக சேகரம் செய்யப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். மேலும், சேகரிக்கப்படும் குப்பைகள் உரிய முறையில் தரம் பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிதாக 6 நுண் உர மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி