திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், பொருளியல் மன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் இல. ரேவதி தலைமை வகித்தார். இணைப் பேராசிரியர்கள் து. வைகுந்தவாசன், பெ. ஜோசப் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் அ. ம. அயோத்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக புள்ளியியல் ஆய்வாளர் க. வெங்கடேசன், தருமபுரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மா. கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பொருளியல் உயர்கல்வி பெறுவது குறித்தும், இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள், போட்டித் தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து, பொருளியல் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் இல. ரேவதி, தருமபுரி உதவிப் பேராசிரியர் ம. கோவிந்தராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவில், கல்லூரியின் கெளரவ விரிவுரையாளர்கள் சி. மு. கணேஷ், ம. பூங்காவனம், வி. ஆனந்தராமன், ர. அறிவழகன், சா. இளவரசி மற்றும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.