தி. மலை: கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

0பார்த்தது
திருவண்ணாமலையில் உலகப் புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலத்தின் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றினர். இந்த 10 நாட்கள் திருவிழாவில், பஞ்சமூர்த்திகள் வீதி உலா, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா, மற்றும் 7-ம் நாள் தேரோட்டம் ஆகியவை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் வருகிற 3-ந்தேதி அதிகாலை பரணி தீபமாகவும், மாலையில் அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமாகவும் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி