திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் எ.வ.வேலு தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்தங்களில் குடிநீர், மின் விளக்குகள், கழிவறை வசதிகளை ஆய்வு செய்தார். பக்தர்களின் வசதிக்காக பிரத்தியேக ஆன்ட்ராய்டு செயலி நிறுவப்பட்டுள்ளது. இதில் பொது தகவல்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவ முகாம்கள், குடிநீர் நிலையங்கள், காவல் சேவை மையங்கள், கழிவறைகள், அவசர உதவி எண்கள், காணாமல் போன குழந்தைகளை கண்டறிய உதவி எண்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த செயலியை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார்.