பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில், நவம்பர் 24-ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமாகும். முக்கிய நாளான டிசம்பர் 3-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இதையொட்டி, இன்று முதல் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் திருக்கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.