திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ. வேலு, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டத்தின் கீழ் சமூதாய முதலீட்டு நிதிக்கான ஆணைகளையும் மகளிர் குழுக்களுக்கு வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை ரூ. 4 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் 3,396 நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் க. தா்பகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.